கடந்த மாதம் டெல்லியில் இரவு 9 மணியளவில் தனது நண்பருடன் சினிமா பார்த்துவிட்டு தனியார் பஸ் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பி ஏறிய இளம்பெண் பாலியல் வன்முறைக்கானாதோடல்லாமல் வெறித்தனமாக தாக்கப்பட்டு குடல் பிய்க்கப்பட்டு கடைசியில் இறந்து போனார்.
பஸ் முழுக்க கருப்புக் கண்ணாடி இருந்ததாலும், ஏ.சி பஸ் என்பதால் வெளியே சத்தம் கேட்காது என்பதாலும் நடு ரோட்டில் நடந்த
இக்கொடுரத்தை யாரும் கண்டுபிடிக்கவே முடியாமல் போனது.
இக்கொடும் செயலை செய்த ஐந்து கொலையாளிகள் குடிபோதையிலும், ஏற்கனவே குற்றச் செயல்கள் செய்து விகாரமான சைக்கோக்களாகவும் இருந்துள்ளனர். இந்த மனநிலையில் அன்று கிடைக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்வது என்றும் பின்னர் அவளை கொல்வது என்றும் முன்கூட்டியே முடிவு செய்து, வந்து விழும் இரைக்காக பல்லி காத்திருப்பது போல பஸ்ஸில் காத்திருந்துள்ளனர்.
இவர்கள் மதுவின் மயக்கத்தில் தான் இந்தத் தவறைச் செய்தார்கள் என்று தண்டனையிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குடிப்பதே ஒரு தவறு. அதில் குடித்துவிட்டு தவறிழைத்தால் அதற்காக தண்டனையை குறைக்கக்கூடாது. மாறாக இரட்டிப்பாக்க வேண்டும். சட்டத்தில் இவையெல்லாம் ஓட்டைகள் தான்.
இந்தக் கொடூர நிகழ்வை படமாக்க பல பாலிவுட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதில் பாதிக்கப்பட்ட மாணவியாக நடிக்க பல பெரிய நடிகைகளும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதைப் படமாக்கும் அறிவிப்பை ஒயிட் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு என்று மூன்று மொழிகளில் இப்படம் தயாரிக்கப்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியாக ரேவதி என்கிற ரே நடிக்க இருக்கிறார். அனிருத் படத்திற்கு பிண்ணணி இசை கொடுக்க இருக்கிறார்.
அப்பெண் இறந்ததையொட்டி நடிகர் அமிதாப்பச்சன் எழுதிய கவிதைகளை படத்தில் உபயோகிக்க விரும்பி அவரைக் கேட்க அவரும் கவிதைகளை படத்துக்குத் தந்துள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த இசையமைப்பாளர் குலாம் அலி இப் பாடல்களுக்கு இசையமைக்க இருக்கிறார்.
படத்தின் பெயர்… ப்ரீடம் (Freedom).