இன்று காலையில் குடியரசு தினத்துக்கு சென்று கொடியேற்றின கையோடு விஸ்வரூபம் பட பஞ்சாயத்தைத் தீ்ர்க்க பிரசாத் லேபுக்கு மத்தியானம் வந்து இறங்கியது நீதிபதிகள் குழு ஒ!ன்று. நீதிபதிகள் குழுவும் ஆதரவு மற்றும்
எதி்ர்தரப்பு வக்கீல்கள் குழுவுமாக சுமார் 60 பேர் விஸ்வரூபத்தைப் பார்த்தனர்.
வெளியே பெரும் பரபரப்புடன் சி.என்.என் தொடங்கி சன் டி.வி. வரை எல்லோரும் காத்திருக்க மாலை நாலு மணியளவில் படம் முடிந்து வந்த நீதிபதிகள் வாசலில் நின்று போட்டோக்களுக்கு மட்டும்
போஸ் கொடுத்துவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டனர். பின்னாடியே வந்த சாருஹாசனும், வக்கீல்களும் கூட அப்படியே போஸ் கொடுத்துவிட்டு கிளம்ப ஆரம்பிக்க ஸாருஹாசனை பத்திரிக்கையாளர்கள்
மடக்கி என்னவாச்சு என்று கேட்டனர்.
அவரோ நீதிபதிகள் கோர்ட்டில் இந்த கேஸ் இருப்பதால் இது பற்றி எதுவும் யாரும் இப்போது கருத்து சொல்லக்கூடாது என்று கூறியிருப்பதாகக் கூறிவிட்டு கிளம்பினார்.
இதற்கிடையே நேற்று பாரதிராஜா கொடுத்த பேட்டியால் பாதி கோலிவுட் சினிமாகாரர்கள் புத்தி பேதலித்து கமலுக்கு ஆதரவுக் கரம் நீட்ட ஆரம்பித்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையடுத்து அமீரும் தற்போது கமலுக்கு ஆதரவாக பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தானே இதெல்லாம் நடக்குது. அங்குதானே அல்கொய்தா தீவிரவாதி குர்ரான் படிச்சுகிட்டே கழுத்தை அறுக்கிறான் அதை காட்டினா இங்கிருக்கிற முஸ்லீம்களுக்கு என்ன கோபம் என்கிற ரேஞ்சில் பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.
அல்கொய்தா இன்று நேற்றல்ல 1992 களிலிருந்தே இருக்கிறது. அதற்கு அமெரிக்கா தான் முதல் எதிரி. 2004க்குப் பின்னாலிருந்து ஏன் இந்தியாவும் எதிரியாகிவிட்டது என்று படத்தில் யாரும் பேசவில்லை. அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது தொடுத்த போரினால் சுமார் 3 லட்சம் ஆப்கானிஸ்தான் குடும்பங்கள் நாசமாய்ப் போனதே அதற்குக் காரணம் என்ன? என்று கமல் பாய்ந்து விழுந்து கேட்கவில்லை.
அதனாலென்ன. இங்கிருக்கும் ஆதரவுக் கோஸங்களைப் பார்த்தால் படம் திங்களன்று தமிழ்நாட்டில் ரிலீசாகிவிடும் என்று தான் தோன்றுகிறது.
பி.கு. நீதிபதிகள் இன்றைய ஸ்பெஸல் காட்சி பார்க்க 18 பேருக்கு அனுமதி சொல்லியிருந்தார்களாம். ஆனால் பிரசாத் லேபில் படம் பார்த்தவர்கள் எண்ணிக்கை 62ஐத் தாண்டிவிட்டதாம்.
யார் அனுமதியின்றி இவ்வளவு பேரை உள்ளே விட்டது என்று நீதிபதி டென்ஸனாக போலீசார் தெரியலிங்க என்று மண்டையைச் சொறிந்து நின்றார்களாம்.