பொதுவாக ஜே.கே.ரித்தீஷ், பவர்ஸ்டார் போன்ற உப்புமா பார்ட்டிகளின் பட ரிலீஸ் தினத்தன்றுதான் ஓ.சி.யில் படத்தோடு பிரியாணியும், குடிக்க குவார்ட்டர் தண்ணீரும் கிடைக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் நூறு கோடிக்கு மேல், அதாவது 120 கோடியில் உருவான ‘விஸ்வரூபம்’ ரிலீஸன்று அனைவருக்கும் பிரியாணி கிடைக்க ஏற்பாடு செய்திருந்தார் சகலபிரியாணி வல்லவரான கமல்.
படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று சிலர் வதந்தி கிளப்ப, ‘அப்பிடியெல்லாம் இல்ல. நீங்க படம் பாத்துட்டு எல்லாருக்கும் பிரியாணி கிண்டி போடுவீங்க’ என்பது கமலின் கமெண்ட்.
ஆனால் ரிலீசுக்கு இன்னும் 48 மணி நேரங்களே இருக்கும் நிலையில்,…
’உயிரைக்கொடுத்தாவது ’விஸ்வரூபம்’ படம் வெளிவருவதைத்தடுப்போம்’ என்று தீவிர எச்சரிக்கையுடன் சில இஸ்லாமிய அமைப்புகள் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகை இட்டதைத் தொடர்ந்து கமலின் ‘விஸ்வரூபம்’ ரிலீஸ், தமிழக அரசால் மேலும் 15 நாட்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தனது படத்தின் சிறப்பு பிரிமியர் காட்சிகளுக்காக அமெரிக்கா சென்று, தற்போது லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள விஸ்வரூபர் கமல், இந்த திடீர் தடை செய்தி கேட்டு, சில நிமிடங்கள் செய்வதறியாது திகைத்து நின்றாராம்.
’தடை தமிழ்நாட்டில் மட்டும்தானே? அமெரிக்காவில் பிரிமியர் ஷோ போடுவதற்கு யாருக்கும் ஆட்சேபனை இருக்காது என்றே நினைக்கிறேன்’ என்பது ஆதங்கத்தின் உச்சத்தில் கமலிடமிருந்து கடைசியாக வந்த வார்த்தைகள்.அப்படியே சென்னை ஆழ்வார்ப்பேட்டையைக் காலிசெய்துவிட்டு, லாஸ் ஏஞ்சல்ஸ் லார்டுவாக மாறிவிடலாமா என்றும் யோசித்து வருகிறாராம் இந்த ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா.
என்ன பாவம் செய்தாரோ ‘விஸ்வரூபம்’ படம் எடுத்ததற்காக ’கைப்புள்ள’யவிடவும் அதிக அடி வாங்கிக்கொண்டே இருக்கிறார் நம்ம கமல்பயபுள்ள.
கமல் ஸ்டில்லு ரொம்ப போரடிச்சிருங்க. அதான் நம்ம ஸ்ருதி,…