‘இஸ்லாமிய சகோதரரகளுக்கு எதிராக எனது ‘விஸ்வரூபம்’ படத்தில் காட்சிகள் எதுவும் இல்லை. படம் பார்த்தபிறகு அவர்கள் அனைவருக்கும் பிரியாணி கொடுத்துக்கொண்டாடுவார்கள்’ என்று கமல் உத்தரவாதம் கொடுத்தபிறகும், ’ரிலீஸுக்கு
முந்தி நாங்க படத்தைப் பாத்தே ஆகனும்’ என்று கமலுக்கும், அவரது மக்கள் தொடர்பு வட்டாரங்களுக்கும் தொடர்ந்து போன்கள் வந்துகொண்டே இருக்கிறதாம்.
ரிலீஸுக்கு முந்தினநாளே டி.டி.ஹெச்சில் ரிலீஸ் பண்ணுவதால் தியேட்டர் உரிமையாளர் வகையறாக்களால் வந்த தொகையறாக்களை ஒருவழியாக சரிக்கட்டி’ ஸ், .. அப்பாடா,…’ என்று ஓய்வெடுக்க நினைத்தவேளையில் ஓயாமல் வரும் மேற்படி போன்களால் கமல் ரொம்பவே அப்செட்.
‘போன் பண்ணுகிற ஒவ்வொருவரும் ஒவ்வொரு அமைப்பின் பெயரைச்சொல்லி’படம் காட்டச்சொல்லி’ எனக்குப்படம் காட்டுகிறார்கள். இஸ்லாமிய அமைப்பைச்சேர்ந்த ஒரு நாலுபேர் முன்வந்து, மேற்படி குழப்பவாதிகளுக்கு ஒரு முடிவுகட்டினால் நன்றாக இருக்கும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் கமல்.
அப்பிடியே பிரியாணியை எப்ப, யார்கிட்ட, எப்பிடி வாங்குறதுன்னு சொல்லிட்டா நல்லாருக்கும் கமல் சார்.