உலக சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத பரபரப்பை ஏற்படுத்தி ஓய்ந்த ‘விஸ்வரூபம்’ விவகாரம் சற்றுமுன்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது. ஆனால் ‘ஓரளவுக்கு’ என்ற இந்த வார்த்தை ஓரளவா, பேரளவா என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது.
இன்று நாள் முழுவதும் தமிழக அரசுக்கும்,கமல் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடந்த ‘நான்சென்ஸ்’ விவாதங்களும், தீர்ப்பு வெளியாவது 3 மணி, 5 மணி, 8 மணி கடைசியில் பத்து மணி என்று தள்ளிவைக்கப்பட்ட போது, பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, தடையை ரத்துசெய்த நீதிபதி வெங்கட்ராமன், நாளையே ‘விஸ்வரூபம்’ படத்தை வெளியிட அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பால் மகிழ்ந்து கமல் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட, எதிர்தரப்பினர் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று நம்புவதாக பேட்டி அளித்துக்கொண்டிருக்கின்றனர்.