அமீரின் ‘ஆதிபகவன்’ படம் பார்த்து பாதி உயிர் போயிருந்த நிலையிலும் விமர்சனம் என்ற பெயரில் ஒரு 25 வரிகளாவது எழுதிப்போடாமல் இருப்பது சினிமா தர்மமாகாது என்ற முடிவுடன், படம் பார்த்த சனி மாலை முதல், சற்று முன்னர் வரை, முக்கித்தக்கி, தக்கிமுக்கி,
முக்கித்தக்கிமுக்கி, தக்கிமுக்கித்தக்கி எவ்வளவோ பல்டி அடித்துப் பார்த்தும் படத்தின் தரத்தை வார்த்தைகளால், விமர்சனத்தில் வெளிப்படுத்த முடியவில்லை.
பலசமயங்களில் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு சின்ன புகைப்படம் சிறப்பாக செப்பிவிடும்.
இனி உங்களுக்கும் எனக்கும் நடுவுல என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு?