பிரச்சினை முடிந்த மறுநாளான நேற்றே ‘விஸ்வரூபம்’ படத்தை ரிலீஸ் செய்திருக்க முடியும் எனினும், மணிரத்தினத்தின் ‘கடல்’ பிஜாய் நம்பியாரின் ‘குடல்’ ச்சே,.. ஸாரி ‘டேவிட்’ ஆகிய இரு படங்களுமே, கடந்தவாரம் ‘வி’வுக்கு அரசு தடை நீடிப்பு இல்லாதிருந்தால்,வழிவிட்டு விலகி நிற்கத்தயாராக இருந்தன என்ற காரணத்தால்,
மேலும் 4 நாட்கள் அவை இரண்டும் வசூலை அள்ளீக்குவிக்க வழிவிட்டு, வரும் வியாழன் 7-ம் தேதியன்று ரிலீஸ் செய்கிறார் கமல்.
அனைத்து பஞ்சாயத்துக்களும் முடிந்து, ஆப்கானிஸ்தானில் இறுதிக்கட்ட எடிட்டிங் நடந்து வரும் ‘விஸ்வம்’ தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகவிருக்கிறது.
இது தொடர்பாக சற்றுமுன்னர் கமலிடமிருந்து வந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் ‘ஆவனவெல்லாம்’ செய்த தமிழக முதல்வருக்கு இரட்டை அர்த்தத்தில் நன்றி தெரிவித்துள்ள கமல், நெருக்கடியான நேரத்தில் தனக்கு செக்’ அனுப்பி, அரசின் முரட்டு அடக்குமுறைக்கு செக் வைத்த ரசிகர்களுக்கு அழுது, தொழுது நன்றி தெரிவித்திருக்கிறார்.
‘உங்கள் முகவரிகள் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன. இனி பிரச்சினைகள் வந்தால் அந்த முகவரிகளைத் தேடித்தான் வருவேன்’ என்ற மிரட்டலுடன் கூடிய அறிக்கை அது.கமலின் அவையில் இருந்த தமிழ்ப்புலவர்கள் விடுமுறையில் சென்றுவிட்டார்களோ என்னவோ, அறிக்கையில் ஏகப்பட்ட பிழைகள்.