திருப்பதியில் மொட்டையடிக்கும் பணியை ஆண்டு தோறும் யாரேனும் குத்தகைக்கு எடுப்பார்கள் என்று ஒரு தகவல் உண்டு!
தமிழ் சினிமாவையும் மொட்டையடிக்க அப்படி அவ்வப்போது சிலர் குத்தகைக்கு எடுப்பார்கள்.
சென்ற ஆண்டு வரை அந்த குத்தகையை விடாப்பிடியாக தன் கைவசம் வைத்திருந்தார் எஸ்ரா.
தன்னந்தனியனாக, தனிக்காட்டு ராஜாவாக அவர் மட்டும் அடித்த மொட்டை இதுவரை 150 கோடியைத் தொடும் என்கிறது சினிமா வட்டம்.
சமீபமாக அவருக்குப் போட்டியாக களம் இறங்கியிருக்கிறார் ஜெமோ!
எஸ்ரா என்ன செய்தாலும் அதற்குப் போட்டியாக ஒரு விஷயத்தை செய்வது ஜெமோவின் வழக்கம்!
இந்த ஆண்டு துவக்கத்தில் சமர் என்று ஒரு மொக்கைப் படம் எழுதி விஷாலை மொட்டையடித்தார் எஸ்ரா.
அதற்குப் போட்டியாக உடனடியாக கடல் என்ற படம் எழுதி மணிரத்தினத்தை மொட்டையடித்திருக்கிறார் ஜெமோ!
இவர்கள் இருவரும் இயக்குனர்களை கவர்ந்திழுப்பதற்கு தனித் தனி உத்திகளைப் பயன்படுத்துவார்கள்!
உலக சினிமாவே தனக்கு அத்துப்படி என்று பெருமை பேசி அதை நிரூபிப்பதற்காகவே தினசரி ஐந்து படங்களை ஃபாஸ்ட் ஃபார்வார்டில் பார்த்து அந்த படங்களின் கதைச் சுருக்கங்களை இயக்குனர்களிடம் சொல்லி வசீகரிப்பார் எஸ்ரா.
இந்தியத் தத்துவ ஞானமே என் விரலிடுக்கில் என்று பெருமை பேசி ஆங்காங்கே மடங்களில் கேள்விப் பட்ட விஷயங்களை நைச்சியமாக நாகர்கோயில் பாஷையில் பேசி ஈர்ப்பார் ஜெமோ!
ஏதாவது சின்ன கேள்வி கேட்டால் அதற்கு கார்பரேஷன் லாரி குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவது போல மணிக்கணக்காக பேசிக் கொல்வார் எஸ்ரா.
ஏதாவது சின்ன கேள்வி கேட்டால் அன்று இரவே அமர்ந்து 400 பக்கங்கள் டைப் அடித்து இயக்குனர்கள் தூக்கவே முடியாத ஒரு பண்டுலை அனுப்பி வைப்பார் ஜெமோ!
நான் தேசாந்திரி, தெருத்தெருவாய் அலைந்தவன், ஊர் ஊராய் பயணப் பட்டவன் என்று பொய் சொல்லி சுகப்படுத்துவார் எஸ்ரா.
நான் அநாதை, சிறு வயதிலேயே என் அம்மா அப்பா எனக்கு முன்னால் தற்கொலை செய்து கொண்டார்கள், நான் பிச்சைக்காரர்களோடு படுத்து தூங்கியவன், பிணம் எரித்தவன் என்றெல்லாம் பொய் சொல்லி இயக்குனர்களுக்கு பயம் உண்டாக்குவார் ஜெமோ!
இப்படி இருவரும் சினிமாவிற்குப் பயன்படாத விஷயங்களாக சொல்லி இயக்குனர்களுக்கு காம்ப்ளக்ஸ் உண்டாக்கி அவர்கள் அசரும் நேரத்தில் அடிப்பதுதான் அந்த மொட்டை!
எஸ்ராவின் சாயம் சமீப காலமாக கொஞ்சம் வெளுத்து விட்டது!
வெளுக்காமல் இருப்பது ஜெமோவின் சாயம் மட்டுந்தான்!
அதற்குள் எஸ்ரா உண்டாக்கிய 150 கோடி நஷ்டத்தை தானும் உண்டாக்கி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறாராம் ஜெமோ!