காதல் வலையில் விழுந்த பிறகு, பொதுவாக நடிகைகள், எதிர்கால கணவனுக்கும் ஏதாவது மிச்சசொச்சம் இருக்கட்டுமே என்ற நினைப்பில் கொஞ்சம் இழுத்து மூடி நடிக்க ஆரம்பிப்பார்கள்.
இதில் கல்யாணத்தன்றே குத்து’ டான்ஸ் ஆடுகிற வித்யா பாலன்கள் விதிவிலக்கு. தற்போது இந்த ‘போல்டு அண்ட் பியூட்டிஃபுல்’ பட்டியலில் இடம் பிடிக்க முடிவு செய்திருக்கிறாராம், இதுகாறும் கண்ணியமான ரோல்களில் கவனம் செலுத்திவந்த பொன் வசந்தா சமந்தா.
தமிழ்ப்படங்களுக்கு டாட்டா சொல்லிவிட்டு, முழுநேரமும் தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவின் இப்போதைய டார்கெட் நயன் தாரா. இவர் விட்டிருக்கும் கேப்புகளை ஃபில் அப் பண்ணவேண்டுமானால்,அந்த அளவுக்கு எக்ஸ்போஸ் செய்யத்துணியவேண்டும் என்பதை உணர்ந்து ஏற்கனவே அந்த வழியில் நடைபோட ஆரம்பித்துவிட்டார் சமன் தாரா.
இங்கே இடையழகைக் காட்டி, கடிக்கத்துடிக்கும் வெல்லம் போல், சமன் நின்றுகொண்டிருப்பது தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷின் மகன் அறிமுகமாகும் பெயரிடப்படாத படத்துக்காக. ஒரு தடவைக்கு நாலு தடவை உத்துப்பாத்தீங்கன்னா, சமனின் முகத்தில் நயனின் சாயல் தெரியும்.
அப்படியே மாஸ்டர் கூட ஒரு படம் மல்லுக்கட்டுனீங்கன்னா நயனோட ஃபுல் எஃபெக்டும் உங்களுக்கே வந்துரும் சமன் தாரா.ட்ரை சேஸ்தாரா?’