தற்போது நடித்துக் கொண்டிருக்கும் விஷ்ணுவர்த்தனின் வலை படத்துடன் சேர்ந்து தொடர்ச்சியாக அடுத்து ‘தல’அஜீத் நடிக்க இருக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பாக நாகிரெட்டி தயாரிக்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இப்படத்தை இயக்க இருப்பவர் சிவா.
வலை படப்பிடிப்பின் போது காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது படத்தை முடித்துக் கொடுக்க தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், வரும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஹைதராபாத்தில் நடப்பதாக இருந்த இப்படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வதாக இருந்தார். துவக்க விழாவைத் தொடர்ந்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடப்பதாக இருந்தது.
இந்நிலையில் தமிழ் நாடெங்கும் ஈழத்தமிழருக்காகக் கிளர்ந்தெழுந்துள்ள மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஈழத்தமிழர்களுக்காகவும் நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று உண்ணாவிரதம் சென்னையில் நடக்க இருக்கிறது.
இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள விரும்பிய அஜீத் தயாரிப்பாளருடன் கலந்து பேசினார். அதன் பின்னர் படத்துவக்க விழாவும் அதைத் தொடர்ந்த படப்பிடிப்பும் ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜீத் போல பெரிய நடிகர்கள் பலரும் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2008ல் கூட இதே போன்று ஈழமக்களுக்கு ஆதரவாக நடிகர்கள் சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டபோது அதில் அஜீத், ரஜினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தல தலையிட்டாலும் என்ன ?ஈழப் பிரச்சனையை காங்கிரஸ் கண்டுக்கவா போகுது ?
தமிழ்நாட்டின் முண்ணனி நடிகர்கள் பலரும் ஒன்றாகச் சேர்ந்தால் அரசுடன் பேசி அகதிகளாக இருக்கும் ஈழத்தமிழர்கள் இங்கு சுயமரியாதையோடு உழைத்து சொந்தக் காலில் வாழ வழி செய்யலாம். வெறுமனே ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பதோடு நின்றுவிடாமல் இது போன்ற விஷயங்களில் அவர்கள் மனம் விரும்பி ஈடுபடும் போது தான் அவர்களின் புகழ் மற்றும் பணத்தால் சாதாரண மனிதர்களால் செய்ய இயலாததை சூப்பர் ஸ்டார்கள் ஈழத் தமிழர்களுக்குச் செய்தார்கள் என்று பேசப்படுவார்கள்.
சூப்பர் ஸ்டார்கள்ன்னா பின்ன என்ன, ஏதாச்சும் வித்தியாசம் வேண்டாமா ?