பார்ன் டு எக்ஸ்ப்ளோர் வித் வீய்ஸ்(Born To Explore With Weise) என்பது அமெரிக்காவில் பிரபலமான ஏ.பி.சி தொலைக்காட்சித் தொடர். இதல் வீய்ஸ் என்னும் யாக்ட் படகு வீரர் உலகைச் சுற்றி பயணம் செல்வார். அங்கிருக்கும் கலாச்சாரங்களைப் பற்றி அமெரிக்க மக்களுக்கு விளக்கும்படியாக இருக்கும் ஒரு டாகுமெண்டெரியும் எடுப்பார். அதுவே இந்தத் தொடர். (அமெரிக்கா தன் எதிரி நாடுகளையும் அதன்
பழக்கவழக்கங்களையும் மோசமாக சித்தரிப்பது போல கலாச்சார பரிவர்த்தனை என்கிற பெயரில் தனது நட்பு நாடுகளையும் அவற்றைப் பற்றிய நல்ல விஷயங்களையும் தனது மக்களுக்கு வழங்கும் ).
அமெரிக்கத் தமிழர்ளை மையமாக வைத்து தனது முதல் திரைப்படமான ‘அச்சமுண்டு! அச்சமுண்டு!’ வைத் தயாரித்த ஆனந்த் கோவிந்தனும், இயக்கிய அருண் வைத்யநாதனும், ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கும் கல்யாண சைமயல் சாதம் என்கிற படத்தை தற்போது தயாரித்து வருகின்றனர்.
பிரசன்னா, லேகா வாஷிங்க்டன், டெல்லி கேணஷ், உமா பத்மநாபன் மற்றும் கீதா ரவிஷங்கர் நடித்து வரும் இத்திரைப்படத்தை, ஏ.பி.சி தனது பார்ன் டூ எக்ஸ்ப்ளோர் நிகழ்ச்சிக்காக படம் பிடித்தனர். ரிச்சர்ட் வீஸ் ஏ.பி.சி நிறுவனத்திற்காக தயாரிக்கும் இந்நிகழ்ச்சி ஐந்தைரை கோடி அமெரிக்கர்களை சென்றைடயும் மிகப் பிரபலமானதொரு நிகழ்ச்சி.
படத்தின் இயக்குனர்ஆர்.எஸ். பிரசன்னா இதுபற்றிச் சொல்லும் போது “இந்தியத் திருமணங்கைளயும், அதில் இருக்கும் பல வணணமயமான வழிமுறைகைளயும் நான் விளக்கி சொல்ல, ரிச்சர்டும் அவரது குழுவினரும் ஆர்வமாக அதைப் படம் பிடித்தனர். படத்தின் ஒரு நிமிட ஒளிக்கோப்பை அவர்களிடம் காட்டிய போது, அவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன! எங்கள் குழுவினருக்கு அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உற்சாகமூட்டியதாக இருந்தது!”.
இந்த நிகழ்ச்சியானது நேஷனல் ஜியாகிரபி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது இன்னொரு உபரித் தகவல். கல்யாண சைமயல் சாதத்தை கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்ய, அரோரா எனும் புதிய இசை அமைப்பாளர் அறிமுகமாகிறார்.
இந்திய கலாச்சாரம் என்பதை அமெரிக்கன் வந்து தான் நமக்கு பெருமைப்படுத்த வேண்டியிருக்கிறது. நம் மக்கள் தான் மெக்டொனால்ட், டேட்டிங், லிவிங் டுகெதர், கே.எஃப்.சி, பர்கர், பிட்ஸா என்று ஏற்கனவே அமெரிக்க வாழ்க்கையை அடிபின்னி எடுக்கிறார்களே. இனிமேல் நம் கலாச்சாரம்னு தனியா படம் பிடிக்க அமெரிக்கனுக்கு புதுசா ஏதும் கிடைக்காது. நாம தான் பாதி அமெரிக்கனா வாழ்ந்துகிட்டிருக்கோமே.