சமீபத்தில் வார இதழ் ஒன்றின் கேள்வி பதில் பகுதியில் இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார். 1970லிருந்து 199களின் ஆரம்பம் வரை ரஜினி மற்றும் கமலின் படங்களுக்கு பெரும்பாலும் (எம்.எஸ்.விக்கு அடுத்து) இளையராஜாவே இசையமைத்துள்ளார். “தற்போது ஏன் அவர்களின் படங்களுக்கு இசையமைப்பதில்லை?” என்ற வாசகர் ஒருவரின் கேள்விக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் அவர்.
ரஜினி திரைக்கதை எழுதி நடித்த 93வ் வெளியான படம் ‘வள்ளி’. அதன் வெற்றிக்கு இளையராஜாவின் இசை ஒரு முக்கிய காரணம். கமலின் இயக்கத்தில், ராஜாவின் இசையில் 2004ல் வெளிவந்த விருமாண்டி படமும் இதே போன்று ஆழமான கதையும், அதற்கேற்ற இசையும் கொண்ட வெற்றிப்படம். அதில் வரும் ‘உன்னை விட’ பாடல் எப்போது கேட்டாலும் மனத்தை மயக்கும். ஆனால் இவற்றுக்குப் பின் எந்த படங்களிலும் ரஜினியோ கமலோ இளையராஜாவைத் தேடி வரவில்லை.
“என்னை வைத்துத் தான் இசையமைக்க வேண்டும் என்று நான் யாருடனும் ஒப்பந்தம் போடுவதில்லை. அவர்களது அடுத்த படங்களுக்கு எனது இசை சரியாக பொருந்தி வராது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அது தவறு என்று அவர்களுக்குத் தெரியாது.
காரணம் எந்தப் படத்திற்கு எப்படி இசையமைப்பேன் என்று என்னாலேயே கணிக்க முடியாது. எனக்கு இந்த இசை தான் தெரியும் என்று யாரும் லேசில் எடை போடவேண்டாம். என்னை வேண்டாம் என்று சொல்வது அவர்கள் இஷ்டம். அதனால் நஷ்டம் அவர்களுக்கே. ஆனால் காலாகாலத்திற்கும் நின்றிருக்கும், நிலைத்திருக்கும் என் இசை”.
இவ்வாறு இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
மிகக் கடினமான, சிக்கலான சிம்பொனி இசைத் தொகுப்பு ஒன்றையே புதிதாய் வடிவமைத்தவராயிற்றே அவர். அவர் சொல்வது உண்மைதான். அதை சந்தேகமின்றி மனது ஏற்றுக் கொள்கிறது. ஆனால் அத்தோடு ஒரு சிறு கேள்வியும் மனத்தில் எழுகிறது.
காலாகாலத்திற்கும் நிலைத்திருக்க, நினைத்திருக்கப் படவேண்டும் என்றால் ஒரு இசை மக்களின் வெறும் இனிமையான வாழ்க்கையோடு மட்டுமல்லாமல், மக்களின் போராட்டத்தை, துயரங்களை மற்றும் வலிகளையும் பேசும் இசையாக மற்றும் அவர்களுக்கு சமுதாய, அரசியல் விழிப்புணர்வையும், எழுச்சியையும் தரும் இசையாகவும் இருந்தால் மட்டுமே மக்களால் நூறு வருடங்களுக்கும் மேல் நினைக்கப்படும் சாத்தியம் உண்டு.
உங்கள் இசை காலாகாலமும் நிலைத்திருக்கும்; நிலைத்திருக்க வேண்டும் என்று எங்களுக்கும் கூட தீராத ஆசை இருக்கிறது ஐயா. ஆனால்..