உலகின் முன்னணி நிறுவனமான சோனி, தனது புதிய டேப்லட் இசட்(Tablet Z) ஐ வெளியிடுகிறது. ஏற்கனவே,எக்ஸ்பீரியா இசட்(Xperia Z) என்ற ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது எல்லோருக்கும் தெரிந்ததே.
இந்த எக்ஸ்பீரியா டேப்லட் இசட் ல், ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டம்(Android Jellybean OS)ம், 1.5 ஜிகா ஹெர்ட்ஸ்(Giga Hertz)
குவார்டு கோர், ஸ்னாப் டிராகன் எஸ்4 புரோ ப்ராசசர்(Processor)ம் மற்றும் 2 ஜிபி ரேம்(RAM) மெமரியும் உள்ளது.
எக்ஸ்பீரியா டேப்லட் இசட் கையடக்கமான டேப்லட் ஆகும். தற்போதைய டேப்லட்களிலேயே மிக மிக மெல்லியதான இதன் பருமன் 6.9 மி.மி மட்டுமே. இது ஆப்பிள் ஐபாட் மினி (7.2 மி.மி.) ஐ விட சிறியது.
10.1 இன்ச் 1920 X 1200(WUXGA) மொபைல் பிரேவியா இஞ்ஜின் 2 கொண்ட ஹெச்.டி திரையும், ,8 மெகா பிக்ஸல் பின்புற கேமிராவும், 2 மெகா பிக்ஸல் முன்புற கேமிராவும், எஸ் போர்ஸ் 3டி(S-Force 3D) சவுண்ட் சிஸ்டமும் கொண்டது. தண்ணீர் மற்றும் தூசில் இருந்து பாதுகாப்பு வசதி உள்ளது.
எக்ஸ்பீரியா டேப்லட் இசட் வைஃப்பி 802.11(Wifi),மற்றும் வைஃப்பியும் எல் டி இயும் (LTE)சேர்ந்த இரு வேறு மாடல்களில் கிடைக்கிறது. எல்.டி.இ என்பது 4வது தலைமுறை வைஃப்பி எனலாம். இதில் அதிவேக டேட்டா பரிமாற்றங்கள் நிகழும்.
இதன் விலை 25000 ரூபாய் (16 ஜிபி ராமுடன்) இலிருந்து 30000 ரூபாய் (32ஜிபி ரேமுடன்) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சந்தைகளில் ஏப்ரலிலிருந்து இது கிடைக்கும்.
–உழவன்