திமுகவுக்கு ஆதரவாக, கடந்த சட்டமன்ற தேர்தலில் பேசி அதனால் சினிமாவிலிருந்தே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த வடிவேலு இந்த முறை பாராளுமன்றத் தேர்தல் வருகிறது என்று கேள்விப்பட்டதும் ஆப்பிரிக்காவில் கண்காணாத ஊருக்கு இப்போதே எஸ்கேப் ஆகிவிட்டாரா?
அதெல்லாம் இல்லை. இது அவர் அடுத்து நடிக்கவிருக்கும் படம். ஏற்கனவே இம்சை அரசன் பார்ட் 2 வை எடுக்க சிம்பு தேவனுடன் இணைந்து முயற்சி செய்து அதில் பட்ஜெட் பிரச்சனை வரவே படம் நின்று போனது. மறுபடியும் இப்போது வடிவேலுவுடன் கைகோர்க்க இருப்பவர் கே.எஸ்.ரவிகுமார்.
கோச்சடையான் முடிந்ததோ இல்லையோ இவரை இயக்கத்திலிருந்து சௌந்தர்யா மேடம் ஓரங்கட்டிவிட்டதால் ரஜினியின் அடுத்த படமான ராணாவை இயக்குவதாகச் சொல்லியிருந்தார்கள். ராணாவின் வேலைகள் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் சமீபத்தில் இல்லையாதலால் இப்படத்தை இயக்க சம்மதித்திருக்கிறார் என்கின்றனர்.
ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதிய டாக்டர் காயத்ரி இப்படத்திற்கான கதையை எழுதியுள்ளார். வடிவேலுவுக்காக காயத்ரி சொன்ன கதை பிடித்துப் போனதால் கே.எஸ்.ரவிகுமாரும், வடிவேலுவும் ஓ.கே. சொல்லிவிட்டார்களாம். ஆப்பிரிக்கா காட்டில் தன்னந்தனியாக மாட்டிக்கொள்ளும் வடிவேலு சந்திக்கும் வேடிக்கையான மற்றும் வினோதமான பிரச்சனைகளை காமெடியாகச் சொல்வது தான் கதை.
படத்திற்கு தயாரிப்பாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். பிரமாண்டமாக தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வரும் போது படம் ரெடியாகும்.
எப்படியோ வடிவேலுவுக்கு மறு ஜென்மம் கிடைச்சா சரிதான். “அது சரி போட்டோல நடுவுல ஏன்யா சம்பந்தமில்லாம நயன்தாரா வர்றாங்கன்னு” கேக்குறீங்களா…? .. ஹிஹி..