ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்தது முதல் ஹிந்தியில் படு பிஸியாகிவிட்டார். தமிழில் அவருக்கு வாய்ப்புக்கள் ரெடியாக இருந்தாலும் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. தெலுங்கிலும், இந்தியிலுமே அவரது கவனம் முழுதும் இருக்கிறது.
இதற்கிடையே கமல் தனது விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தையும் முடிக்க இருக்கிறார். பாகம் ஒன்றில் முஸ்லீம்களின் கணக்கை முடித்தது போக இதில் மீதம் யார் கணக்கை முடிக்க இருக்கிறார் என்று தெரியவில்லை. படத்தின் மேல் பொதுவாக மக்களுக்கு ஒரு வித வெறுப்பு வந்து விட்டாலும் கமல் என்னவோ அதை வெற்றி என்றே பார்க்கின்றார். படம் நல்ல கலெக்ஷனும் கூட.
வி.ரூ – 2 ஜூலைக்குள் முடிவடைந்து விடும். அதன் பின் உடனே தனது அடுத்த படமான ‘பிட்டர் சாக்லெட்’டை எழுதி இயக்கி, நடிக்கிறார் கமல்ஹாசன். இதில் ஒரு வேடத்தில் நடிக்க தனது மகள் ஸ்ரூதியிடம் கேட்டுள்ளார் கமல். தற்போது தெலுங்கில் பலுப்பு, யேவடு, ரேஸ் குர்ரம் மற்றும் ஒரு பெயரிடப்படாத படம் என நான்கு படங்களிலும் ஹிந்தியில் டி-டே மற்றும் ராமையா வஸ்தாவையா என்கிற இரண்டு படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிக்கு அப்பாவுக்குக் கொடுப்பதற்கு கால்ஷீட்டே இல்லையாம். அதனால் ‘ஸாரிப்பா. உங்களோட அடுத்த படத்துல பார்ப்போம்’னு சொல்லிட்டாராம்.
ட்விட்டரில் அப்பாவுக்குக் கால்ஷீட் கொடுக்கக் கூட நேரமில்லாத அளவு பிஸியானதற்காக சந்தோஷமும் அதே நேரத்தில் அப்பாவின் படத்தில் நடிக்க முடியவில்லையே என்று வருத்தமும் பட்டிருக்கிறார் ஸ்ருதியக்கா.