பவர் ஸ்டாரின் பவரினால் தமிழ்த் திரையுலகமே கதிகலங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் சனிப் பெயர்ச்சியின் வலிமையால் தொடர்ந்து சோதனைகளை சந்திக்க இருக்கிறது தமிழகம் புதிய சோலார் ஸ்டாரின் வரவால்.
டி.வி. சீரியல் புன்னகையரசி தேவயானியின் காதல் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் தான் அந்த சோலார் ஸ்டார். அவரே தயாரித்து, கதாநாயகனாக நடித்து,
இயக்கி இம்சை பண்ணும் படம் தான் ‘திருமதி தமிழ்
‘. இந்த சோலார் ஸ்டவ்.. ஸாரி சோலார் ஸ்டார் பட்டத்தை ராஜகுமாரனுக்கு வழங்கியதும் அம்மணியே தானாம்.
இப்படத்தில் தேவயானி அம்மணி மற்றும் கீர்த்தி சாவ்லா ஆகிய இருவர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ரமேஷ் கண்ணா, லிவிங்ஸ்டன், ரோகிணி, ராதாரவி, கஞ்சா கருப்பு போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் 360 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறதாம் திருமதி தமிழ். ராஜகுமாரன் நாயகனாக நடிக்கும் முதல் படம் இது. தேவயானிக்கு இது 75 ஆவது படம். படத்திற்கு யு சர்ட்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால் வரிவிலக்கு கிடைக்கும் என்கிறார் ராஜகுமாரன்.
வரும் 19ஆம் தேதி ரீலீஸாக இருக்கிறது இப்படம். எனவே அன்று சென்னையிலும் தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கலாமா என்று அரசு பரிசீலித்து வருவதாகக் கேள்வி.