ஃபீனிக்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆஷிக் இயக்கத்தில் தம்பி ராமையா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் ஆஜீத் உள்பட பல புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் “உ”.
இந்தப் படம் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஆனால், திடீரென்று சில தினங்களுக்கு முன்பு பத்திரிகை நண்பர்களுக்கு உ என்ற
தலைப்பிடப்பட்டு வேறு ஒரு படத்தின் செய்தி அனுப்பப் பட்டுள்ளது.
அதைக் கேள்விப்பட்டதும் உ படத்தின் இயக்குநர் ஆஷிக் ரொம்பவே கொதித்துவிட்டார்.
“உ” என்ற தலைப்பை 2012ம் ஆண்டு, ஜூன் மாதம் 30ம் தேதி தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் பதிவு செய்துவிட்டதாகவும் கடந்த ஜனவரி மாதம் எல்லா நாளிதழ்களிலும் ‘உ’ படத்தின் விளம்பரங்கள் கொடுத்ததாகவும் ஆனால் யாரோ வேண்டுமென்றே பிரச்சனையை கிளப்ப உ என்கிற அதே பேரிலேயே சமீபத்தில் விளம்பரம் கொடுத்துள்ளனர் என்று கொதிக்கிறார் ஆஷிக். இது சம்பந்தமாக தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் கில்டில் முறையாக கம்ப்ளெய்ண்ட் செய்துள்ளார் இயக்குநர் ஆஷிக்.
தமிழில் உ என்றும் ஆங்கிலத்தில் அதையே VU என்றும் பதிவு செய்திருக்கிறார் ஆஷிக்.. ஆனால் எதிர்தரப்போ ஆங்கிலத்தில் WOO (ஊ) என்று பதிவு செய்து விட்டு அதை தமிழில் உ என்று மாற்றிச் சொல்கிறார்கள். இது மோசடி என்கிறார். ஒருவேளை இது தவறுதலாக கவனிக்காமல் விடப்பட்டிருக்கும் வேளையில் சம்பந்தப்பட்டவர்கள் வந்து தன்னுடன் பேசியிருந்தால் இதை ஆரம்பத்திலேயே சரி செய்திருக்கலாம். இவ்வளவு நாளும் விளம்பரங்கள் வரும் வரை அமைதியாயிருந்துவிட்டு திடீரென்று இப்படி படத்தின் தலைப்பை சொந்தம் கொண்டாடுவது சரியல்ல என்கிறார்.
எதிர்தரப்பாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்கிறார்கள்? சீக்கிரம் பேசி முடிவு பண்ணி மத்த வேலைகளைப் பாக்க ஆரம்பிங்க பாஸ்… இல்லாட்டி ரெண்டு படங்கள் இந்த வீணாண சண்டையில உ..ஊன்னு சங்கு ஊதிக்கப்போகுது.