நான்கு தீய மனிதர்களிடமிருந்து மூன்று வேறுபட்ட காரணங்களுக்காக இரண்டு பெண்கள், உயிரை பணயம் வைத்து தப்பியோடும் ஓர் இக்கட்டான நாளில் நடக்கும் நிகழ்வுகளின் கோர்வைதான் ‘விடியும் முன்’.
சமுதாயத்தின் இருண்ட பக்கங்களையும், மனித வாழ்க்கையின் தடுமாற்றமான தருணங்களையும் சற்றும் நேர்மை குறையாமல் இயக்குனர் பாலாஜி கே குமார் பதிவு செய்துகொண்டிருக்கும் படம் தான் விடியும் முன். பாலாஜி ஹாலிவுட்டில் பல சினிமா நுட்பங்களில் பணிபுரிந்திருக்கிறார். விளம்பரப் படங்கள் பல எடுத்திருக்கிறார். நைன் லைவ்ஸ் ஆப் மாரா(Nine lives of Mara) என்கிற விருதுகள் பெற்ற ஆங்கிலப் படத்தை எடுத்திருக்கிறார். இவர் இயக்கும் முதல் தமிழ்ப் படம் தான் வி.மு.
இப்படத்தில் நான் கடவுள் பூஜா, வினோத் கிஷன், லட்சுமி ராமகிருஷ்ணன், ஜான் விஜய், முத்துக்குமார், அமரேந்திரன் போன்றோர் நடித்திருக்கிறார்கள். ஏசியானெட் மலையாளத் தொலைக்காட்சியில் மம்மூட்டியின் ரியலிட்டி ஷோவில் சிறந்த நடிகை பட்டம் வாங்கிய மாளவிகா குட்டன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
காயம் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் வளரும் இப்படத்தின் இசை – கிரிஷ், ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன், கலை – எட்வர்ட் கலைமணி, படத்தொகுப்பு – சத்தியராஜ். த்ரில்லர் டைப் படம் போலத் தெரியும் 1,2, 3, 4 என்று வெளிவரும் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.