angelina-jolie-breast-cancer

ஹாலிவுட்டில் தற்போது பரபரப்பாய் பேசப்படும் விஷயம் பிரபல நடிகை ஏஞ்சலினா ஜோலியின்(Angelina Jolie) மார்பக அறுவை சிகிச்சை பற்றியே. தற்போது கேன்ஸர் அவருக்கு இல்லையென்றாலும் எதிர்காலத்தில் கேன்ஸர் அவருக்கு வந்துவிடும் என்று டாக்டர்கள் அறுதியிட்டுக் கூறியதால் இந்த ரிஸ்க்கான முடிவை எடுத்திருக்கிறார் அவர்.

37 வயதாகும் ஏஞ்சலினா ஜோலியின் அம்மா மார்ஷலினுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டு அவர் தனது 56 வயதில் இறந்து போனார். அப்போது ஏஞ்சலினா ஜோலியின் மரபணுவை (டி.என்.ஏ) ஆராய்ந்த மருத்துவர்கள் தாயின் டி.என்.ஏ போன்று மாறுதலடைந்திருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். BRCA1 மற்றும் BRCA2 என்று பெயரிடப்பட்ட மரபணுக்கள் அவை. இந்த டி.என்.ஏ மாறுதல்களால் ஏஞ்சலினாவிற்கு கர்ப்பப் பை புற்று நோய் வருவதற்கு 87% வாய்ப்புள்ளது. அதே போல் இவற்றால் மார்பகப் புற்றுநோயும் தோன்ற 50 முதல் 75 சதவீதம் வரை வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர்.

இதன் விளைவாக சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக தனது இரு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக் கொண்டார். இந்த ஆப்பரேஷனின் போது அவருடன் ஆறுதலாகவும் உறுதுணையாகவும் இருந்திருக்கிறார் அவரது காதலரும் கணவராகப் போகிறவருமான பிராட்பிட்(Brad Pitt). மிகக் கவர்ச்சிகரமான பெண் என்று சில வருடங்களுக்கு முன் ஹாலிவுட்டில் பத்திரிகைகளால் புகழப்பட்ட ஏஞ்சலினா இவ்வாறு செய்திருப்பது பலரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதே போல இன்னும் சிறிது வருடங்கள் கழித்து கர்ப்பப் பையையும் ஆப்பரேஷன் செய்து அகற்றிவிட உத்தேசித்துள்ளார் ஏஞ்சலினா. பாவம் அவர். நம் இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறைகளான ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் தமிழ்நாட்டு சித்த வைத்திய முறைகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தால் இந்த மாதிரியான முடிவு எடுக்க வேண்டிய நிலை வந்திருக்காது அவருக்கு.

உதாரணமாக சித்த வைத்தியர்களின் கூற்றுப்படி நாட்டு வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயத்தை உணவில் தொடர்ந்து அதிகமாகச் சேர்த்துக் கொண்டே வருபவர்களுக்கு எந்தவித கேன்ஸர் வியாதியும் வராது என்று இருக்கிறது.

வாழ்க்கையில் பல கஷ்டங்களைத் தாண்டி புகழுக்கு வந்த ஏஞ்சலினா ஜோலி, தனது சினிமா வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கிவிட்ட கேன்ஸருடனான இந்தப் போராட்டத்திலும் குலைந்து போகாமல் வாழ்க்கையை எதிர்த்து நிற்பது அவருடைய மனஉறுதியைக் காட்டுகிறது.

வந்த கேன்ஸருக்கு வைத்தியம் செய்வது கஷ்டமான காரியம் தான். வாழ்க்கை அதற்குப் பிறகு அதிகபட்சம் 20 வருடங்கள் தான். ஆனால் இன்னும் வரவே வராத வியாதிக்காக, வருமா என்று உறுதியாகத் தெரியாத வியாதிக்காக உடலை அறுத்தெறிவது என்ன விதத்தில் நல்லது ?

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.