பிரான்ஸிலுள்ள கேன்னஸ் நகரில் நடைபெறும் சர்வதேச திரைப்படவிழா மே 15ஆம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இதில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து கூட ரஜினிகாந்த், அமிதாப், ஐஸ்வர்யாராய் போன்றோர் தற்போது அங்கு சென்றுள்ளனர்.
இன்று நேரடி ஒளிபரப்பாக கிரான்ட் ஜோர்னல் டெ கேனால் டெலிவிஷன் ஸ்டூடியோவிலிருந்து ஒரு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆஸ்கர் விருது வாங்கிய கிரிஸ்டோப் வால்ட்ஸ்(Christoph Waltz) மற்றும் டேனியல் ஆடியூ(Daniel Auteuil) பங்குபெற்ற நேர்காணல் இன்டர்வியூ நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது பார்வையாளர்கள் நடுவிலிருந்து எழுந்த ஒரு மனிதன் துப்பாக்கியால் வானத்தை நோக்கி இருமுறை சுட்டான். உடனே சுற்றியிருந்த அனைவரும் பீதியடைந்து ஒடினர். மேடையில் இருந்த இரு நடிகர்களும் குதித்தோடி மறைந்து கொள்ள பாதுகாப்பில் இருந்த பாதுகாவலர்கள் பார்வையாளர்கள் கூட்டத்தில் புகுந்து அந்த மனிதனை மடக்கிப் பிடித்தனர்.
அந்த மனிதன் வேறு யாரையும் குறிவைத்துச் சுடவில்லை. அவனிடமிருந்து இரு கையெறிகுண்டுகளும், ஒரு கத்தியும் கைப்பற்றப்பட்டன. கையெறி குண்டுகள் போலியானவை என்று போலீஸார் தெரிவித்தனர். பிடிபட்ட அந்த நபர் யார் என்று தெரியவில்லை. என்ன காரணத்திற்காக சுட்டான் என்பதும் இன்னும் தெரியவில்லை.
அந்த நபரை காவல்துறை மடக்கிப் பிடித்த பின் கூட்டம் திரும்பவும் தொடர்ந்து நடைபெற்றது. வழக்கமாக அமெரிக்காவில் தான் இந்த மாதிரி துப்பாக்கிச் சூடுகள் நடைபெறும். இப்போது பிரான்ஸிலும் ஆரம்பித்திருக்கிறது.