பி.வாசுவின் இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா நடித்த சந்திரமுகி 2005ல் வெளிவந்தது. ரஜினியின் மெகா ஹிட் படங்களில் அதுவும் ஒன்று. அதன் ஒரிஜினல் படம் மலையாளத்தில் 1993ல் பாசிலின் இயக்கத்தில் வந்த மணிச்சித்திரதாழு என்கிற படமாகும். அதில் ஜோதிகா நடித்திருக்கும்
கேரக்டரை நடிகை ஷோபனா செய்திருந்தார். அப்படத்தில் அவருடைய மிரட்டலான நடிப்புக்காக ஷோபனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. ரஜினியின் டாக்டர் கதாபாத்திரத்தை அப்படத்தில் மோகன்லால் செய்திருப்பார்.
மணிச்சித்திரதாழு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அனைத்து ரீமேக்குகளுமே ஹிட்டாகின. முதலில் கன்னடத்திலும் பின் தமிழிலும் பி.வாசு இயக்கினார். தமிழில் ஷோபனாவின் பாத்திரத்தை ஜோதிகா செய்திருந்தார். அவருடைய நடிப்பும் பிரமாதமாயிருந்தது.
தற்போது மலையாளத்தில் சந்திரமுகி பார்ட் 2 கீதாஞ்சலி என்கிற பெயரில் தயாராகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த மோகன்லால் மற்றும் ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். தமிழிலும் இதை ரீமேக் செய்யலாமா என்று யோசித்து அதில் ரஜினியை நடிக்க வைக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
மணிச்சித்திரதாழு அடைந்த வெற்றி போலவே மலையாளத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடையும் வெற்றியைப் பொறுத்து மற்ற மொழியாக்கங்கள் அமையும்.