மும்பை குண்டு வெடிப்பு, ஈழப் படுகொலை, சுனாமி என்பது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நிஜவாழ்வில் நடந்தாலும் கும்மாங்குத்துப் பாட்டு, பத்துப் பேரை பறக்கடிக்கும் பைட்டு என்று தான் தமிழ் இயக்குநர்கள் சிந்திக்கிறார்கள்.
ஒருத்தருக்கும் இவற்றைப் பிண்ணணியாக வைத்து ருசிகரமான கதைகளைப் பிண்ணும் தைரியம் இருப்பதில்லை. தமிழ் ரசிகர்களோ டாஸ்மார்க்கில் மயங்கிய நேரம் போக இடுப்பொடிய ஆடும் பாட்டுகளில் மயங்கி நிற்கிறார்கள்.
இதைத் தகர்க்க முன்வந்திருப்பவர் விஜய் டி.வி புகழ் இப்படிக்கு ரோஸ் என்கிற திருநங்கை. கிரிக்கெட் ஊழல் மூலம் இந்திய மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக கதை அமைத்திருக்கிறார் அவர். இதற்காக ஒரு கிரிக்கெட் ஊழல் புள்ளியை பின்தொடர்ந்து சென்று பல விவரங்களை திரட்டியுள்ளார். இன்டர்நெட் மூலமாக புக்கிகளுடன் கூட பேசி பல உண்மைகளைப் பெற்றுள்ளாராம் ரோஸ்.
சென்னை அணியின் கேப்டனுடன் ஒரு திருநங்கை நட்பாகிறார். இந்த நட்பின் பிண்ணணியில் ஸ்பாட் பிக்சிங், புக்கிகள் எனப்படும் பந்தயத் தரகர்கள், கோடிக்கணக்கில் புரளும் பணம் போன்ற எல்லா திரைமறைவு விஷயங்களும் வெளிச்சமாக்கப்படுகின்றனவாம்.
யக்கோவ்.. வீரதீர டைரக்டர்களெல்லாம் இப்படி ஒரு விஷயத்தை கையில எடுக்க பலமா யோசிக்கிற வேளையில் ஒருவேளை அப்படி ஒரு நெத்தியடிப் படத்தை சாட்டையடியா மக்கள் முதுகில விழுகிற மாதிரி எடுத்துட்டீங்கன்னா தமிழ்த் திரையின் அடுத்த விடிவெள்ளி நீங்களேதான்.