த்ரிஷா, அசின், காஜல் அகர்வால், இலியானா, தமன்னா போன்ற தென்னிந்திய நடிகைகள் ஏற்கனவே இந்திப் படங்களில் நடித்துவிட்டனர். ஆனால் யாருக்கும் மார்க்கெட் ஸ்ரீதேவி அளவிற்குப் பிச்சிக் கொண்டு போகவில்லை.
ஆனாலும் கோலிவுட்டை விட பணம், சம்பளம் எகிறும் பாலிவுட்டுக்கு பல நடிகைகளும் எப்போதும் தூது விட்டுக்கொண்டே இருப்பார்கள். அந்த லிஸ்டில் சமீபத்தில் இருப்பவர்கள் ஷர்மியும், ப்ரியாமணியும்.
ஷாருக்கானின் சென்னை எக்ஸ்ப்ரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் ப்ரியா மணி. இரண்டு ஹிந்திப் படங்களில் நடித்துவிட்டார் ஷர்மி. ஆனாலும் புதிதாய் அவருக்கு வாய்ப்புக்கள் வரவில்லை. இந்நிலையில் ஷாஹித் கபூர் நடிக்க பிரபுதேவா இயக்கும் ‘ராம்போ ராஜ்குமார்’ என்கிற ஹிந்திப் படத்தில் ஒரு நடனமாட வாய்ப்பு வந்ததும் உடனே ஒப்புக் கொண்டாராம்.
தமிழப் படத்தில் இவர்கள் இப்படி நடனமாட வேண்டும் என்று வற்புறுத்திக் கூப்பிட்டாலும் வரமாட்டார்கள். ஏனென்றால் ‘எங்கே விலை போகணுமோ அங்கே தானே மாடு துள்ளி விளையாடனும் ?’