சபரி மலைக்குச் செல்லும் பக்தர்களின் பாட்டுப் போல இருக்கும் இது உண்மையில் புதிதாக தயாரிக்கப்பட இருக்கும் ஒரு படத்தின் தலைப்பு. மைதானம் படத்தை இயக்கிய எம்.எஸ்.சக்திவேல் இப்படத்தை இயக்குகிறார். புதுமுக ஹீரோவாக இனிகோ பிரபாகர் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.
படத்தில் பரோட்டா சூரி, மனோபாலா எம்.எஸ். பாஸ்கர் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முழு நீள நகைச்சுவைப் படமான இப்படத்துக்கு ஏன் இப்படிப் பெயர் வைத்தார்கள்?
ஏற்கனவே இரண்டு படங்களை எடுத்து பெரும் நஷ்டத்தை அடைந்த இப்படத்தின் தயாரிப்பாளர், தன் மனத்தின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் காட்டும் விதமாக சென்டிமென்ட்டாக ‘மேலே ஏறி வாரோம்.. அட ஒதுங்கி நில்லு’ என்று செலக்ட் செய்து வைத்தாராம். காமெடி படத்துக்கு ஏற்ற வித்தியாசமான பெயர் என்று இயக்குநருக்கும் பெயர் ஓ.கே.தான். அப்புறமென்ன படக் கோஷ்டியினர் கூட்டமாக மேலே ஏறி வருகிறார்கள். அட ஒதுங்கி வழிவிட்டு நில்லுங்க..