பெரும் ஹிட்டாகி ஓடிக் கொண்டிருக்கும் தீயா.வே.செ.குமாருவின் இரண்டாம் பாகம் பட்டைய கெளப்பணும் பாண்டியாவா என்று நினைத்து விடாதீர்கள். இது வேறு படம். பெயரை வைத்தே தெரிந்து கொள்ளலாம் இதுவும் அதைப் போல ஒரு காமெடிப் படம்.
படத்தை இயக்குபவர் எஸ்.பி.ராஜ்குமார். இவரது முந்தைய படமான ‘சுறா’வை சுனாமி வந்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிட்டதால் இனி ஆக்ஷன் சப்ஜெக்ட் வேண்டாம். பாதுகாப்பான காமெடி சப்ஜெக்டை எடுப்போம் என்று நினைத்துவிட்டிருக்கிறார்.
விதார்த், சூரி, மனிஷா யாதவ், இமாம் அண்ணாச்சி போன்றோர் நடிக்கின்றனர். பழனிப் பகுதியில் ஓடும் ஒரு மினிபஸ் ன் டிரைவர் விதார்த். அதில் தினமும் செல்லும் பள்ளி மாணவி மனிஷா. இருவருக்குமிடையே காதல் வருகிறது. பஸ் கண்டக்டராக சூரி, பஸ் ஓனராக இமாம் அண்ணாச்சி நடித்துள்ளனர். மினி பஸ் தான் கதைக் களம் என்பதால் 16 லட்ச ரூபாய்க்கு ஒரு மினி பஸ்ஸையே வாங்கி விட்டார்களாம்.
எஸ்.பி.ராஜகுமாரிடம் படம் பற்றி கேட்டபோது, ‘வடிவேலுக்கு நான் எழுதிய பல காமெடிகள் இப்போதும் ஹிட். அந்த அனுவத்தின் மேல் நம்பிக்கை வைத்து இந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கிறேன்’. கதை லேசாகவும் காமெடி அதிகமாகவும் வைத்திருக்கிறேன். ‘ என்றார்.