யாயா என்கிற காமெடிப் படத்தில் சந்தானம், சிவா மற்றும் பவர் ஸ்டார் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் சிவாவின் பெயர் டோனி, சந்தானத்தின் பெயர் சேவாக். பவர்ஸ்டாரின் பெயர் பீர்பால். ஹீரோயின்கள் தன்ஷிகா மற்றும் சந்தியா ஆகியோர்.
படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது ஒரு நாள் காட்சியில் சிவாவுக்கும் சந்தானத்துக்கும் கதைப்படி மோதல் ஏற்படும். சந்தானம் சிவாவை சிக்கலில் மாட்டிவிட அதை சிவாவிடம் சொல்வதற்காக வருவார் பவர் ஸ்டார்.
இந்தக் காட்சியில் பேச ஆரம்பித்த பவர் ‘எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் அந்தக் கேசவன் தான்’ என்றார். ‘என்னடா இது படத்தில் கேசவன் என்கிற கேரக்டரே இல்லையே’ என்று குழம்பி உடனே கட் செய்த இயக்குநர் ராஜசேகர் திரும்ப ரீடேக் எடுக்க திரும்பவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் கேசவன் என்றாராம் பவர்.
பவரைக் கூப்பிட்டு இயக்குநர் விஷயம் என்னவென்று கேட்டபோது தான் தெரிந்தது பவர்ஸ்டார் சேவாக்கை கேசவன் என்று நினைத்துக் கொண்டிருந்தது. சேவாக் யாருன்னாவது இவருக்குத் தெரியுமா தெரியாதா என்று மொத்த யூனிட்டும் சிரித்துக்கொண்டே பேக்கப் செய்தார்களாம்.