இதயம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் ஒருதலைக் காதல்களை கொஞ்சம் நாடகத்தனமான கவிதைநயத்துடன் கூறிய இயக்குனர் கதிர். இவரது உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் போன்ற படங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இதில் பெரும்பாலானவை மிகப் பெரும் ஹிட்டுகள்.
எல்லோரும் நினைத்திருப்பதற்கு மாறாக இவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. தற்போது இவருக்குத் திருமணம் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. காதல் பட இயக்குனரான இவர் செய்ய இருப்பது வீட்டில் பெரியவர்கள் பார்த்த பெண்ணை.
திருநெல்வேலிக்காரரான இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சாந்தினிதேவி என்கிற பெண்ணை வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கோவிலில் மணக்க இருக்கிறார். திருமண வரவேற்பு சென்னையில் 4ம் தேதி நடக்க இருக்கிறது. மதுரையில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு இவரது நெருங்கிய நண்பரான ஏ.ஆர்.ரஹ்மான் வருவார் என்கிற பேச்சு அடிபடுகிறது.
சோகப்படமா எடுத்தவருக்கு சொகமான வாழ்க்கை வர இருக்குது.. நல்லகாலம் பொறக்குது…வாழ்த்துக்கள் .