திருமணத்துக்குப் பின் முன்பே கால்ஷீட் கொடுத்திருந்த சில படங்களில் மட்டும் நடித்ததோடு சரி. மீனா பின்பு வேறு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. பின்பு குழந்தை நைனிகா பிறந்து வளர்ந்தபின் வந்த சீரியல் வாய்ப்புக்களையும் மறுத்தே வந்திருக்கிறார் மீனா. குழந்தை
நைனிகாவின் படிப்பும் எதிர்காலமுமே முக்கியம் என்று சினிமா வாய்ப்புக்கள் அனைத்தையும் மறுத்தே வந்திருக்கிறார்.
தமிழ் சினிமா உலகமும் அவரை மறக்க ஆரம்பிக்கும் வேளையில் திருமணத்துக்கு முன்பு அவர் நாயகியாக நடித்து தெலுங்கில் வெளிவந்து பெண்கள் ஆதரவு பெற்று ஓடிய பக்தி-ஆக்ஷன் படமான வெங்கமாம்பாவை தற்போது தமிழில் திருமலைவாசா என்ற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். ஆடி மாதம் பெண்களின் பக்தி மாதம். எனவே அதைக் குறிவைத்து வெளியாகும் இப்படம்.
திருப்பதி அருகே தரிக்கொண்டா எனும் ஊரில் வெங்கமாம்பாவாக பிறந்து வளர்ந்து இறுதியில் தேவியின் அம்சமாக மாறி ஸ்ரீதேவியாக மறைந்த தெய்வீகபப் பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாம் இப்படம்.
மீனா தேவியாகவும், வெங்கமாம்பாவாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜூன் , சரத்பாபு, சுதா ரங்கநாத், போன்றோர் நடித்திருக்கிறார்கள்.
வெங்கமாம்பா மீனாவை திரும்ப தமிழ் திரையுலகிற்குள் கூட்டி வருவாளா ? ஆத்தா பதில் சொல்லு ?