நான் படத்தின் வெற்றிக்குப் பிறகு தான் நடித்து இசையமைக்கும் ‘சலீம்’ படத்தின் வேலைகளை ஓசையின்றி செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. சமீபத்தில் தனது முகநூல் (facebook) தளத்தில் அவர் இது பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறதாம். மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் நடிப்புக்கிடையே அமர்ந்து பாடல்களுக்கும் இசையமைத்து முடித்துள்ளார்.
பாதிக்கு மேல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் படத்தின் காட்சிகளை பார்த்த விஜய் ஆண்டனிக்கு படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளதாம். இப்படத்தில் அவருடைய ஜோடியாக அக்ஷா பர்தசானி என்பவர் நடிக்கிறார்.