அம்மா அம்மம்மா மற்றும் ஆசைப்படுகிறேன் என்கிற பெரிதும் பேசப்படாத படங்களை இயக்கிய பாலு மணிவண்ணன் கோத்ரா சம்பவத்தை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
அப்படி ஒரு படம் எடுத்தால் அதை பி.ஜே.பிகாரர்களின் கொலைகாரக் கரங்களிலிருந்து தப்பித்து கொண்டு வருவது மிக மிகச் சிரமம். எனவே இவர் அந்த ரிஸ்க் எடுப்பாரா / தெரியவில்லை.
குழந்தையொன்று பெற்றவர்களுக்கும் அதைச் சூழ்நிலையால் வளர்த்தவர்களுக்குமிடையே நடைபெறும் பாசப்போராட்டத்தில் சிக்கித் தவிப்பதுதான் படத்தின் கரு. 2002ல் கோத்ராவில் நடந்த முஸ்லீம் படுகொலைக் கலவரங்களின் போது இரு குடும்பத்தினரிடையே நடந்த நிஜ வாழ்வுப் பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம்.
இயக்குனரின் மனத்தில் ஆழமாகப் பதிந்த ஒரு விஷயத்தை படமாக எடுத்திருக்கிறாராம். சாதாரணமாகப் படித்துவிட்டுக் கடந்து போகமுடியாத ஒரு விஷயம். அதை அந்த நிகழ்வு தந்த வலியுடன் அப்படியே படமாக்கியிருக்கிறேன். என்கிறார்.
அந்தக் கொடூரங்களை எடுக்கும் துணிவு ஆஸ்கார் நாயகனுக்கே கனவிலும் வராத தமிழ்ச் சினிமாவில் அந்த கலவரங்களின் நிதர்சனங்களை லேசாகவாவது பார்க்க விரும்பும் உங்கள் எண்ணம் நல்ல விஷயம். அது வெற்றியடையும் என்று நம்பிக்கையுடன் வாழ்த்துகிறோம்.