செல்வராகவனின் இரண்டாம் உலகம் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் டப்பிங் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் படம் ரெடியாகிவிடும் என்கிறார்கள்.
இந்தப் படத்தை தெலுங்கில் பிருந்தாவனமலோ நந்தகுமாரடு என்று அனுஷ்கா, செல்வராகவன் மார்க்கெட்டுக்காக டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள். இது போக இந்தியிலும் படம் டப் செய்யப்படுகிறது.
ஒரு உலகம் தழுவிய கதையாக இருப்பதாலும் படத்தின் முக்கி.ய பகுதிகள் ரஷ்யாவில் நடப்பது போல அமைந்திருப்பதாலும் படம் ரஷ்ய.கண்டத்து நாட்டு மொழிகளான ஜார்ஜியன், ரஷ்யன், துருக்கி, உஸ்பெக் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்படுகிறதாம்.
செல்வராகவன் அப்படி என்னதான் வித்தியாசமாக கதை வைத்திருக்கிறார். தெரிந்து கொள்ள ஆசையாகத்தான் இருக்கிறது. அவரது ரெயின்போ காலனி மற்றும் காதல் கொண்டேனிலிருந்து இது எவ்வளவு தூரம் வித்தியாசமாய் இருக்கும் ?
இந்த இரண்டாம் உலகத்தால் உலகை திரும்பிப் பார்க்க வைப்பாரா செல்வராகவன்?