வானவில், ராஜ்ஜியம் போன்ற படங்களை இயக்கிய மனோஜ்குமார் அந்தப் படங்கள் ஓடாததால் தனது பெயர் ராசி சரியில்லை என்று பெயரை விஜய மனோஜ்குமார் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்தப் புதிய பெயருடன் அவர் இயக்கவிருக்கும் படம் ‘உயிருக்கு உயிராக’. படிக்கும் காலத்திலேயே காதல், டேட்டிங், மீட்டிங் அப்புறம் மேட்டர் என்று இளவயதினர் தடுமாறும் வேளையில் அவர்களுடைய பெற்றோரின் கடமை என்ன ? என்பது பற்றிப் பேசும் படமாக இது இருக்குமாம்.
இதுவரைக்கும் சரிதான். இதில் அத்தோடு மாணவர்களின் மூளை மகத்தானது என்பதை உணர்த்த ஏரோநாட்டிக்கல் படிக்கும் மாணவனும், கம்ப்யூட்டர் சயன்ஸ் படிக்கும் மாணவனும் சேர்ந்து எதிர்காலத்தில் விமானப் படை போரை எப்படி கட்டுப்படுத்துவது என்று அரிய கண்டுபிடிப்பை செய்கிறார்கள் என்று டெக்னிக்கலாகவும் மிரட்டியிருக்கிறார்களாம். வீட்ல இருந்த மாதிரியே போர் செஞ்சு பாகிஸ்தானை எப்படி பிடிக்கிறதுன்ற மாதிரி விஜயகாந்த் டைப் கற்பனையெல்லாம் கொஞ்சம் ஓவர் தான். எல்லாம் வீடியோ கேம் செய்யும் கோளாறு. நிஜமாகவே குறைவான எரிபொருள் செலவில் நிறைய தூரம் செல்லும் வாகனத்தை கலசலிங்கம் பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். அதை யாரும் கண்டுக்கிற வழியைக் காணோம்.
காதலில் சுற்றி கல்லூரி வாழ்க்கையை முழுக்க வீணடித்துக்கொள்ளும் இளைஞர் இளைஞிகளை வழிநடத்த பெற்றோருக்கு இருக்கும் கடமை என்ன ? இப்படி சூடாக இருக்கிறது கதை.
கதையெல்லாம் சரிதான் ஸார். ஆனா ஸ்டில்ஸ் எல்லாம் ஒரே மிட்நைட் மசாலாவா இருக்கே. மனோஜ் என்ன சொல்றார்னு பின்னாடி பாப்போம். முதல்ல மஸாலாவை பாப்போம். ஹிஹி.