அங்காடித் தெருவில் ஹீரோவின் கறுப்பு நண்பனாக வரும் குண்டுப் பையன்தான் ப்ளாக் பாண்டி. ஆட்டோகிராப், அங்காடித் தெரு, தெய்வத் திருமகள் போன்ற படங்களில் நல்ல கேரக்டர்கள் செய்த ப்ளாக் பாண்டி மேடைக் கச்சேரிகளில் கீ போர்ட் ப்ளேயராக இருந்தவராம்.
சினிமாவில் நடிகராக மாறினாலும் தனது இசை ஈடுபாட்டை தொடர கோடம்பாக்கத்தில் எஸ்.டாட் என்கிற பெயரில் ஒரு டப்பிங் மற்றும் ரெக்கார்டிங் ஸ்டூடியோவை தொடங்கியுள்ளார். வீடியோ ஆல்பங்கள் மற்றும் திரைக்கதை எழுதுவது போன்ற விஷயஙகளில் இறங்குவது என்று நினைத்திருக்கிறாராம்.
எம்.பி.ஏ பட்டதாரியான இவர் உமேஸ்வரி பத்மினி என்கிற பெண்ணை காதலித்து வருகிறார். இந்தக் காதல் ப்ளாக் ஆகி இவரை கல்யாணத்திற்குள் ப்ளாக் செய்ய முயன்றதில் இருவீட்டு சம்மதத்தோடு இவர்கள் திருமணம் வரும் டிசம்பர் மாதம் நடக்க இருக்கிறது.