nazriya-nazim-issue-with-director

சமீபத்தில் என் தொப்புளுக்கு டூப் போட்டுவிட்டார்கள் என இயக்குநர் சற்குணம், தயாரிப்பாளர் முருகேசன், போலீஸ் மற்றும் பிரஸ் என எல்லோரையும் பாடாய்ப் படுத்தி, பின்னர் பஞ்சாயத்துக்கள் செய்து புகாரை வாபஸ் செய்துகொண்ட நடிகை நஸ்ரியாவுக்கு தான் ஒப்பந்தமாகியிருந்த 5 புதிய தமிழ்ப் படங்களில் தற்போது கையில் இருப்பது திருமணம் எனும் நிக்காஹ் என்ற ஒரே படம்தான்.

இரண்டு புதிய படங்களிலிருந்து அவரை விலக்கியிருக்கிறார்களாம். இதில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவரும் சேர்ந்து அவரிடம் என்ன எதிர்பார்த்தார்கள் ? அதில் எதை அவர் நிறைவேற்றவில்லை என்பது தான் நமக்கு சரியாகப் புரியமாட்டேன் என்கிறது. பணம் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் சம்பந்தமாக என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.

தமிழ் சினிமாவில் தன் நிலை தற்போது சறுக்க ஆரம்பித்துவிட்டதைப் புரிந்து கொண்ட நஸ்ரியாவும், தன் சொந்த ஊரிலேயே குப்பை கொட்டக் கிளம்பிவிட்டார். மம்முட்டி மகன் நடிக்கும் படம் உட்பட கடந்த மூன்று நாட்களில் மூன்று புதிய மலையாளப் படங்களில் ஒப்பந்தமாகிவிட்டாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.