‘விண்ணை தாண்டி வருவாயா ‘ படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியை கேட்கும் டயலாக் மூலம் பிரபலமானவர் கணேஷ் .அந்த படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ‘ இங்க என்ன சொல்லுது’ படம் வரை தொடர்ந்து , சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்த
படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து வருகிறது .
இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடை பெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து எடுக்கபட்டார்.
இந்த ஜோடி தேர்வை பற்றி கணேஷ் கூறும் போது ‘சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிக சரியான ஜோடி. என் கணிப்பில் , என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது . ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்த கதாபாத்திரமும் அவர்களுக்கெனவே படைத்தது போலவே பொருத்தமாக இருக்கிறது . படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்தது, இறுதிகட்ட பணிகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது .இந்த மாத இறுதியில் பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறேன் என்கிறார் .