surya-lingu-movie-red-dragon

சூர்யாவின் அடுத்த படத்தை லிங்குசாமி தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலமாக தயாரித்து இயக்கவிருக்கிறார் என்கிற செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த வாரம் சென்னையில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தது. இன்னமும் பெயரிடப்படாத இப்படத்தில் சூர்யா தாடி வைத்தபடி நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பு அடுத்தா மாதம் மும்பையில் துவங்க இருக்கிறதாம். அதற்கு அடுத்த ஷெட்யூல் ஹைதாராபாத்தில் நடக்க இருக்கிறதாம்.

படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மற்றும் இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பின் சூர்யாவின் படத்திற்கு மீண்டும் இசையமைக்கவிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்காக ஹாலிவுட்டிலிருந்து புதிய கேமிரா டெக்னாலஜியான ‘ரெட் ட்ராகன்’ கேமராவை தருவித்து பயன்படுத்த இருக்கிறாராம் சந்தோஷ் சிவன். லிங்குசாமியின் வழக்கமான படங்கள் போல ஒரு நல்ல ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிறதாம் இந்தப்படம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.