தனது முப்பதுகளில் இருந்தாலும் தொடர்ந்த உடற்பயிற்சி, யோகா என்று தனது உடலை கவர்ச்சியாக வைத்திருப்பவர் அனுஷ்கா. அவருடைய அதிகப்படியான உயரம் அவருக்கு கொஞ்சம் மைனஸாக பார்க்கப்பட்டது. உயரம் குறைந்த நடிகர்களுடன் அவர் இணைந்து நடிக்கும்போது நடிகர்கள் சங்கடப்படுகிறார்களாம்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் ‘உங்களுக்கு வரவிருக்கும் மாப்பிள்ளையும் உயரமாகத்தான் இருக்கவேண்டுமா?’ என்று கூட கேட்டுவிட்டார்கள். அவரிடம் இதுபற்றிக் கேட்டால் அவர் சொல்கிறார் “எனது உயரம் ஆறு அடியே இல்லை. ஐந்து அடி ஆறு அங்குலம் மட்டுமே. நான் ஹீரோக்களின் உயரம் அதிகமா இல்லை குறைவா என்று பார்த்து நடிப்பதில்லை. கதையும் எனது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன்.”.
தற்போது அனுஷ்கா தெலுங்கில் ‘ராணி ருத்ரம்மாதேவி’, ‘பாஹூபலி’ ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இவை முடிய இன்னும் ஒரு வருடமாகுமாம். தமிழில் 2ம் உலகத்துக்குப் பின் வேறு எதுவும் படங்கள் வரவில்லை. நடிகர் பாண்டியராஜன் 80-90களில் அசால்ட்டாக ஸ்டூல் போட்டு நின்று உயரமான ஹீரோயின்களுடன் நடித்திருக்கிறார் பல படங்களில். தற்போதைய ஹீரோக்கள் இந்த எளிய ஐடியாவை பின்பற்றினால் என்ன ?