‘எங்கேயும் எப்போதும்’ என்ற தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சரவணன் அடுத்ததாக இயக்கும் படம் ‘இவன் வேற மாதிரி’.. விக்ரம் பிரபு, சுரபி நடிக்கிறார்கள். லிங்குசாமி யு.டி.வி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.
முதல் படத்தில் பார்வையாளர்களிடம் எதுவும் எதிர்பார்ப்புக்கள் இல்லாதிருந்தபோது படம் எடுத்து திரும்பிப் பார்க்கவைத்து விட்ட சரவணனுக்கு தனது புதிய படமான ‘இவன் வேற மாதிரி’யில் தன்மேல் வந்திருக்கும் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய வேண்டும் என்கிற உறுதி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாகும் இது.
சமூகத்தில் ஒரு தவறு நடந்தால் எல்லோரும் அந்த தவறு பற்றி விமர்சிக்கிறோம். கண்டிக்கிறோம். பேசுகிறோம். கருத்து கூறுகிறோம். ஆனால் யாரும் அதற்காக களத்தில் இறங்கிப் போராட முன்வருவதில்லை. ஏன்? நமக்கு என்ன ஆகிவிடுமோ என்கிற பயம். அப்படிப்பட்ட பயம் இல்லாத ஒருவனின் வாழ்க்கைக் கதைதான் இவன் வேற மாதிரி என்கிறார்.