முருகதாஸின் தேசப்பற்றைத் துப்பிய துப்பாக்கி படத்தின் பெரும்பாலான கதைப்பகுதி மும்பையில் நடப்பதாக இருந்தது. இயக்குனர் முருகதாஸ் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை மும்பையிலேயே எடுத்தார். அது நல்ல ஹிட் படமானது. அதைத் தொடர்ந்து விஜய்க்கு வந்த தலைவாவும் மும்பை தாதா வேலுநாயக்கரின் பார்ட் – 2 கதை போலவே மும்பையை மையம் கொண்டது. சென்னையில் மும்பை மாதிரி செட் போட்டு எடுத்தார்கள்.
ஜில்லா ரிலீஸாகவிருக்கும் நிலையில் முருகதாஸின் அடுத்த படத்திலும் விஜய் நடிக்க இருக்கிறாராம். அவருக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். முந்தைய பட வெற்றியின் சென்ட்மென்ட்டில் இந்தப் படமும் மும்பையை மையமாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டிருந்ததாம். பின்னர் கதையின் போக்கு வெவ்வேறு இடங்களில் மாறிவிடவே கொல்கத்தா கதைக்குள் வரும்போலத் தெரிகிறதாம்.
இதற்காக முருகதாஸ் தனது உதவியாளர்களுடன் கொல்கத்தா பயணமாயிருக்கிறார். அங்கே ஷூட்டிங் நடத்தும் இடங்களைத் தேர்வுசெய்து வருகிறாராம். இடத்தை எங்கே மாத்துன்னாலும் விஜய்யோட அப்பாவுக்குத் தெரியாம மாத்திடுங்க ஸார்.