கர்ணன், வசந்தமாளிகை, நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களை டிஜிட்டலில் வெளியிட்டார்கள். அந்த வரிசையில் இப்போது எம்.ஜி.ஆர் நடித்த, கடல்கொள்ளையர்களை மையமாகக் கொண்டு இந்தியாவில் வெளிவந்த முதல் படமான் ஆயிரத்தில் ஒருவனை டிஜிட்டலில் மீண்டும் வெளியிட இருக்கிறார்கள். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நடித்த முதல் படமும் இதுதான்.
நாகேஷ், நம்பியார், மனோரமா போன்றோர் நடிப்பிலும், பி.ஆர். பந்துலுவின் இயக்கத்திலும் வெளிவந்த இப்படத்தின் இசை எம்.எஸ்,வி. தற்போது டிஜிட்டலில் டி.டி.எஸ் சவுண்ட்டில் அதே பிண்ணனி இசையை மெருகேற்றி, சினிமாஸ்கோப் மற்றும் க்யூப் முறையில் திரையிடும் தொழில்நுட்பங்களுடன் வருகிறான் ஆயிரத்தில் ஒருவன்,
கர்ணன் படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி வெளியிட்டு சக்கை வசூலை அள்ளிய ஜி.சொக்கலிங்கம் தனது திவ்யா பிலிம்ஸ் சார்பில் ஆயிரத்தில் ஒருவனையும் மெருகேற்றி வெளியிடுகிறார். பிப்ரவரி கடைசியில் வருகிறான் ஆயிரத்தில் ஒருவன். ‘ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையில்லை..நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை..’. இந்தப் பாட்டை திரும்பவும் பார்க்கலாம் தெளிவாக..