வைரமுத்து-இளையராஜா பிரிவுக்குப் பின் வைரமுத்து ரஹ்மானுடன் சேர்ந்து இசையுலகில் பலவருடங்கள் கொடிகட்டிப் பறந்தார். பின்பு முத்துக்குமார், மதன் கார்க்கி போன்ற இளசுகளின் வரவால் கொஞ்சம் பின்னுக்குப் போய்விட்டார்.
இப்போது முதன்முறையாக யுவன்சங்கா் ராஜாவின் இசையமைப்பில் பாடல்களை எழுத இருக்கிறாராம். இந்த இணைவுக்கு காரணம் சீனுராமசாமி. லிங்குவின் திருப்பதி பிரதர்ஸ்க்காக சீனுராமசாமி இயக்கும் படம் ‘இடம் பொருள் ஏவல்’. விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு நடிக்கின்றனர்.
சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் நீர்ப்பறவையில் வைரமுத்துவே பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்திலும் பாடல்கள் அவரே. இசையமைப்பாளர் பற்றி லிங்குசாமியிடம் பேசும்போது ‘யுவனின் இசையிருந்தால் வரவேற்பு இன்னும் நன்றாயிருக்கும்’ என்று சொன்னாராம். அதை ஆமோதித்த லிங்கு யுவன் தரப்பில் பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார்.
நீண்டநாள் நண்பர்கள் ராஜாவும் வைரமுத்துவும் மீண்டும் கைகோர்க்கும் காலம் வந்தாலும் வரலாம்.