தமிழில் அஜித் நடித்து, விஷ்ணுவர்த்தன் இயக்கி வெளிவந்த ஆரம்பம் படம் அதன் கமர்ஷியலான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் பெற்ற சுமாரான வெற்றியின் காரணமாக ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.
படம் வெளியான போது துபாயில் இருந்த ஷாருக்கான் படத்தைப் பார்த்துவிட்டு உடனே விஷ்ணுவர்த்தனை தொடர்புகொண்டு பாராட்டியுள்ளார். அதை ரீமேக் செய்யவும், செய்தால் தானே நடிக்கவும் விருப்பம் தெரிவித்தார்.
விஷ்ணுவர்த்தனின் வேறுபட வேலைகள் தற்போது முடிந்துவிட்ட நிலையில் ஹிந்தியில் ஆரம்பத்தை ரீமேக் செய்யும் உரிமையை அக்ஷய் குமார் ஏற்கனவே வாங்கிவைத்துவிட்டாராம். இதில் அஜித்தின் ரோலில் நடிக்க சல்மானும் ஆர்வம் காட்டுகிறாராம். அதேபோல ஆர்யாவின் ரோலில் நடிக்க ஹிந்தியின் இளம் நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்களாம்.
நயனின் ரோலில் மட்டும் நயனையே நடிக்கவைங்க பாஸ் என்று ஹிந்திக்காரங்களும் நயனை சிபாரிசு செய்வதாகக் கேள்வி. இனி விஷ்ணுவர்த்தனின் பாலிவுட் என்ட்ரி கோலாகல ஆரம்பம்தான்.