புதுமுகம் பாபு கதாநயகனாக அறிமுகமாக மும்பை மாடல் ஜோதி தத்தா (லாரா தத்தாவுக்கு சொந்தக்காரரோ?) கதாநாயகியாக இறக்குமதியாக எழில் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படம் ஒகேனக்கல். ஒகேனக்கல் பகுதியையும் அதன் சுற்றுப்புறங்களிலும் கதை நடக்கிறது.
நம் ஊரில் சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடி செய்யும் நபர்களும் அதிகம். எல்லாம் தெரிந்திருந்தும் ‘முதலில் நமக்குப் பணம் கிடைத்துவிடுமே மற்றவர்கள் தானே பாதிக்கப்படப்போகிறார்கள்’ என்கிற நப்பாசையில் போய் ஏமாறுபவர்களே இந்த நூற்றாண்டில் அதிகம்.
பெரும் கார்ப்பரேட் பேங்குகள் அனைத்தும் குறுமுதலாளிகளுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் பணம் கடன்கொடுக்கவே ஆர்வம் காட்டும் சூழலில் சாமான்ய மனிதர்களுக்கும், எந்தவித பாதுகாப்பும் இல்லாத குடிசைத்தொழில் செய்பவர்களுக்கும், இதுபோன்ற சீட்டுக்கம்பெனிகளை நம்பி பணம் புரட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
இதுபோன்ற சீட்டுக் கம்பெனி நடத்தி மோசடிகள் செய்யும் கும்பலைப் பற்றிய கதை இதன் மையக்கதையாக அமைந்துள்ளது. (ஸ்டில்லைப் பார்த்தால் வேறு கதையும் இருக்கும் போலத் தெரியுதே பாஸ்!). கதை, திரைக்கதை எழுதி இயக்குபவர் புதுமுக இயக்குனர் எம்.ஆர். மூர்த்தி.புதுமுக அறிமுகங்களுடன் படத்தில் பிருத்வி, ஸிராவியா, நிழல்கள் ரவி, நளினி மற்றும் பலர் நடிக்க இருக்கிறார்கள்.