அழகான மகாலெட்சுமியாக குமரன் சன் ஆப் மகாலெட்சுமியில் ஜெயம்ரவியின் அம்மாவாக நடித்த நதியா அதற்குப் பின்னும் அதுபோன்ற அழகான அம்மா வேடங்களே வந்ததால் சினிமாவிலிருந்து கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டார்.
இந்நிலையில் மலையாளத்தில் பெரும் வெற்றிபெற்ற 22- பீமேல் கோட்டயம் படத்தை ’22- மாலினி பாளையம்கோட்டை’ என்று தமிழில் மகா சொதப்பலாக எடுத்த ஸ்ரீபிரியா மலையாளத்தில் மோகன்லால் – மீனா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற த்ரிஷ்யத்தை தமிழில் கமல் ரீமேக் இருப்பதால் தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்.
அப்படத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக நடிக்க நதியாவை அணுகினார் ஸ்ரீபிரியா. கதையைக் கேட்டு அது மிகவும் நல்ல வேடமாகத் தோன்றியதால் அப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் நதியா.
அழகான பெண் போலீஸ்!!