சமீபத்தில் தனது 90வது வயதில் மறைந்த தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் கடந்த அக்டோபர் மாதம் வயிற்றுவலி என்று மருத்துவரிடம் சென்றாராம். அப்போது தான் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுபற்றி கேட்டபோது அவர் “என்னைப் பரிசோதித்த மருத்துவர் ஒரு தகவலைச் சொன்னார். அது எனக்கு புற்றுநோய் இப்போது தோன்றியது இல்லை. இளம் வயது முதலே இருந்திருக்கிறது என்று. இதைக் கேட்டவுடன் எனக்கு ஆச்சரியம்தான் முதலில் வந்தது. புற்றுநோய் பாதிப்பவர்கள் விரைவில் இறந்துவிடுவார்கள் என்ற விஷயம் முற்றிலும் சரியானது அல்ல.
இளம் வயதினரைத் தாக்கும் புற்றுநோய் உடனே விரைவில் உடலெங்கும் பரவும். ஆனால் இவ்வளவு வயதாகியும் நான் அதுபோன்ற பாதிப்புகளை அடையவில்லை. என் அம்மா கூட புற்றுநோயுடன் 96 வயது வரை வாழ்ந்தார். என்மேல் யாரும் இரக்கப்படுவது எனக்குப் பிடிக்காது. என்னைச் சூழ்நதிருந்தவர்களின் அன்பு மற்றும் பாசத்தால் நான் புற்றுநோயை தோற்கடிப்பேன்”
கடந்த ஜனவரி 22ம் தேதி நாகேஸ்வரராவ் அமைதியாக உறங்கியவாறே இறந்தார். அவர் இறந்ததுகூட புற்றுநோயால் அல்ல. ஹார்ட் அட்டாக்கினால். வலிமையாய் இருக்கும்போது, மனம் உடலைவிட பலநூறு மடங்கு உறுதியானது.