தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘மிஸ்ஸியம்மா’ படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்ய முடிவுசெய்து அதில் நடிக்க ப்ரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்பு ஆரம்பித்து சில நாட்கள் ஷூட்டிங்கும் நடந்துவிட்டநிலையில் ப்ரியாமணி அப்படத்திலிருந்து விலகியுள்ளார்.
படத்தின் தயாரிப்பாளருக்கும் ப்ரியாமணிக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்திலிருந்து ப்ரியாமணி விலகிவிட்டாராம். காரணம் என்னவென்று விசாரித்தபோது ப்ரியாமணி அதிக சம்பளம் கேட்டதாகவும் மற்றும் காஸ்ட்யூம் மற்றும் நகைச் செலவுக்கு அதிகம் பணம் கேட்டதாகவும் கூறுகிறார்கள்.
காஸ்ட்யூம் டிசைனுக்கு தயாரிப்பாளர் சொன்ன டிசைனரை பயன்படுத்தாமல் மும்பையிலிருக்கும் தனது சொந்த டிசைனரை பயன்படுத்தியதாகவும் அதற்கான செலவுகளை ஏற்றிக் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு தயாரிப்பாளர் மறுக்கவே படத்திலிருந்து ப்ரியாமணி விலகியதாகவும் கூறப்படுகிறது.
இது தயாரிப்பாளர் தரப்பு வாதம். படவாய்ப்புக்கள் குறைவாக இருந்து மார்க்கெட் போகும் நிலையில் இருக்கும் நடிகைகள் இதுபோன்று காஸ்ட்யூமுக்காக பிரச்சனை செய்வார்களா என்பது கேள்விதான். நகையையும், காஸ்ட்யூமையும் தவிர வேறு எதுவும் பிரச்சனைகள் இருக்குமா ? தெரியவில்லை.