காதல் புனிதமானது, உன்னதமானது என்பதுபோன்று பேசப்படும் காதல்களுக்கு இப்போதெல்லாம் இடமில்லாததுபோல் தோன்றுகிறது. ஆனால் அதுபோன்ற காதல்கள் எப்போதும் இருக்கின்றன. கல்லூரியில் படிக்கும் பெண்ணுக்கும் கல்லூரி உணவகத்தில் வேலைபார்த்த பையனுக்குமிடையே காதல் என்கிற
செய்தியை தொடர்ந்து சென்றபோது பி.வாசுவின் உதவியாளராக இருந்த மூர்த்தி கண்ணனுக்கு தோன்றிய கதைதான் இது.
துப்புரவுத் தொழிலாளியும் டாக்டருக்கு படிக்கும் பெண்ணுக்குமிடையேயான காதல்தான் சாலையோரம் என்கிற இந்தப் படத்தின் கதை. பொருளாதாரப் பிரச்சனைகளையெல்லாம் கடந்து ஒரு காதல் எப்படி இந்தக் காலத்தில் நிலைக்கமுடியும் என்பதை அலசிப் பார்க்கும் இந்தக் கதை.
புதுமுகங்கள் ராஜ் மற்றும் செரீனா நடிக்க இருக்கிறார்கள். காதல் வருவது நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினரிடையே என்பது படத்தை மேலும் சவாலாக்கக்கூடிய விஷயம். இந்த மாதிரிக் காதல்களுக்கெல்லாம் நம்ம மருத்துவர் ஐயா போன்றவர்கள் எதிரிகளாச்சே. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க டைரக்டர் சார். சென்சார்ல கட் பண்றதுக்கு முன்னாடி உங்களை கட் பண்ணிடுவாய்ங்க வெறிபுடிச்சவய்ங்க.