எளைய தளபதி விஜய்யை உலகப் புகழ் பெறவைக்க ஏ.எல்.விஜய் எடுத்த தலைவா படம் அம்மாவின் ‘அன்பு’க்கு பாத்திரமானதால் பட்ட பாட்டையடுத்து அரசியல் அசைவம் வேண்டாமென்று சைவமாக விரும்பி எடுத்திருக்கும் படம் ‘சைவம்’.
இப்படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் அவரது ‘தெய்வத் திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா. நாசர் அவரது தாத்தாவாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சாராவுக்காக ஒரு பாடலை பாடியிருப்பவர் பாடகர் உன்னி கிருஷ்ணனின் மகள் உத்ரா.
ஒன்பது வயதாகும் உத்ரா நான்கு வருடங்களாக கரநாடக இசை கற்று வருகிறார். உத்ராவை இப்படத்தில் பாடவைத்தவர் படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்ஷின் மனைவியும் பாடகியுமான சைந்தவியாம்.