ஸ்லம்டாக் மில்லியனரில் தொடங்கி அமேசிங் ஸ்பைடர் மேன், லைப் ஆப் பை என்று தொடர்ச்சியாக ஹாலிவுட் படங்களில் நடித்துவிட்டார் இர்பான் கான். அமேஸிங் ஸ்பைடர் மேனில் ஸ்பைடர் மேனாக நடித்த ஆண்ட்ரூ இர்பான்கான் பழகுவதற்கு மிக இனிமையானவர், அடக்கமானவர் என்று புகழ்ந்து
தள்ளுகிறார். அந்தப் படத்தின் இயக்குனரோ இர்பான்கானின் நடிப்புத் திறனை மிகவும் பாராட்டி இர்பான்கானை வைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு ஹாலிவுட்டில் பலரும் வியந்து பாராட்டும் திறமையுள்ள இர்பான்கான் தற்போது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க தயாரிக்க இருக்கும் ‘ஜூராசிக் வோர்ல்ட் ‘எனகிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜூராசிக் வேர்லட் ஏற்கனவே வெளிவந்து உலகெங்கும் பரபரப்பாய் ஓடிய ஜூராசிக் பார்க் படங்களின் வரிசையில் வரவிருக்கும் அடுத்த படமாகும். இப்படத்தின் தயாரிப்பு வேலைகள் ஆரம்பித்துள்ளன.
படத்தை இயக்கப்போவது காலின் ட்ரெவரோ. சுமார் 15 கோடி டாலர்கள் செலவில் தயாராகப் போகும் இந்தப் படம் 2015 கோடை விடுமுறையில் ரீலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இர்பான்கானின் நடிப்புத் திறமையை இந்த கமர்ஷியல் படம் வெளிக்கொணர வாய்ப்புக்கள் குறைவுதான். வேறு ஒரு படத்தில் அது நிறைவேறலாம். நம் ஊர்க்காரர்களும் நடிப்பினால் ஹாலிவுட்டில் புகழ் பெறுவது பெரிய விஷயம் தான். நம் கமல்ஹாசன் கூட அது மாதிரியான ஒரு வாய்ப்பைத் தானே எதிர்பார்த்து காத்திருக்கிறார்.