இளையராஜாவின் மகன் யுவன் முஸ்லீம் மதத்திற்கு மாறியதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. அவர் நீண்ட நாட்களாக இஸ்லாமிய பழக்க வழக்கஙக்ளை கொண்டுவந்ததாகவும் பின் இஸ்லாமியராக மாறியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அடுத்ததாக இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் நடிகர் ஜெய்.
ஜெய் இஸ்லாம் மதத்தின் மீது எவ்வாறு தீவிர பற்று கொள்ள ஆரம்பித்தார் என்பது பற்றி தகவல்கள் தெரியவில்லை. இவர் முன்பு ஒரு முஸ்லீம் நடிகையை காதலித்ததாகவும் அவர் அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதற்கும் இவர் மதம் மாறுவதற்கும் சம்பந்தம் இருக்குமா என்பது கேள்விதான்.
இவர் அனீஸின் இயக்கத்தில் நஸ்ரியாவுடன் ஜோடியாக திருமணம் என்னும் நிக்காஹ் என்கிற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இஸ்லாமிய-இந்து மனங்களுக்கிடையேயான காதலைப் பற்றியது என்பதால் படத்தில் நிறைய இஸ்லாமிய மத பழக்கவழக்கங்கள் சம்பந்தமான காட்சிகள் வந்திருந்தனவாம். அவற்றில் மிக்க ஈடுபாட்டுடன் அவர் நடித்திருந்தாராம். அப்போது இஸ்லாமியர் போல தொழுகைகள் செய்துகொண்டிருந்தாராம். இதற்கு முன்பே அவர் இஸ்லாமிய மதத்தில் ஈடுபாடு கொண்டிருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது.
ஒரு நடிகர் மதம் மாறுவது ரசிகர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண விஷயம் தான். ஆர்யாவையும், விஜய்யையும், அஜீத்தையும் ரசிக்கும் விஷயத்தில் ரசிகர்களிடம் மதம் சம்பந்தமான கண்ணோட்டங்கள் இல்லைதான். ஆனாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ஜெய். இல்லாட்டி இந்த தேர்தல் நேரத்துல நம்ம மோடி சேவகர்கள் ‘திரையுலகினரை யாரோ நயவஞ்சகமாக ஏமாற்றி முஸ்லீமாக மதம் மாற்றுகிறார்கள்’ என்று கிளப்பிவிடப் போகிறார்கள்.